மாயவரத்திலிருந்து தரங்கம்பாடி செல்லும் வழியில் திருக்கடையூரிலிருந்து 6 கி.மீ. தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது.
மூலவர் பாலமுருகனாக கிழக்கு நோக்கி தரிசனம் அளிக்கிறார். மூலவருக்குப் பின்புறம் லிங்கமும், முன்புறம் ஸ்படிக லிங்கமும் உள்ளன. தெய்வானைக்குத் தனி சன்னதி உள்ளது. குமரக்கடவுள் திருக்குரா மரநிழலில் எழுந்தருளியுள்ளார்.
|